புதிய அவதாரம் எடுக்கும் நெட்பிளிக்ஸ் ஓடிடி !

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (22:34 IST)
கடந்தாண்டு கொரொனா தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

பின்னர் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களான திரையரங்குகள், பூங்காக்கள் போன்ற எதற்கும் செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்களுக்கு அப்போது பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது தொலைக்காட்சி தொடர்களும் சீரியல்களும், வீடியோ கேம்களும் , ஒடிடி தளங்களும்தான்.

இந்நிலையில் ,பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், விரைவில் மொபைல் கேமிங்கில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

குறிப்பாகத் தன் ஒடிடி  வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதக் கட்டணம் இன்றி இலவசமாக  இந்த மொபைல் கேமிங் விளையாட வசதி ஏற்படுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்