சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மதுரை அருகே மிகப் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
இந்நிலையில் வாடி வாசல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் காளையும் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் பயிற்சியை சுமார் 1 மாதம் மேற்கொள்ள உள்ள்தாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.