கமல் மற்றும் சூர்யா இணையும் படம்… மலையாள இயக்குனர் தகவல்!

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
மலையாள இயக்குனர் அமல் நீரத் கமல் மற்றும் சூர்யா ஆகியவர்களை கதாநாயகர்களாக வைத்து ஒரு திரைக்கதை எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மலையாள திரையுலகில் படத்தொகுப்பாளராகவும் இயக்குனராகவும் அறியப்பட்டவர் அமல் நீரத். இவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தான் கமல் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் வைத்து ஒரு திரைக்கதை எழுதியுள்ளதாகவும், அதை இருவரிடம் தனித்தனியாகக் கூறி சம்மதம் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்