பாலாவை கைவிட்டு, ஹரியை பிடிக்கும் சூர்யா? – அருவா பணி தொடக்கமா?

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (10:53 IST)
சமீபத்தில் பாலாவின் வணங்கான் படத்திலிருந்து வெளியேறிய சூர்யா மீண்டும் ஹரியுடன் படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் பிதாமகன், நந்தா படங்களுக்கு பின் நீண்ட காலம் கழித்து சூர்யா நடிக்க இருந்த படம் வணங்கான். இந்த படத்திற்கான படிப்பிடிப்பு பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வந்த நிலையில் திடீரென படபிடிப்பு நிறுத்தப்பட்டது.

பாலா – சூர்யா இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக பேசிக் கொள்ளப்பட்ட நிலையில் சமீபத்தில் பாலா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் பல்வேறு காரணங்களால் வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறுவதாகவும், எனினும் வணங்கான் பட பணிகள் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார்.

தற்போது சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகிய நிலையில் மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைந்து படம் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஹரி – சூர்யா கூட்டணியில் ‘அருவா’ என்ற படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தற்போது மீண்டும் அந்த பட பணிகளில் சூர்யா இணைவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்