தமிழ் சினிமாவின் பிரபல பாடகி விஜய்லட்சுமி. மாற்றுத்திறனாளியான அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு செல்லுலாய்ட் என்ற மலையாள படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
அதன்பின்னர், குக்கூ என்ற படத்தின் கொடையில மழை போல என்ற பாடலைப் பாடி தமிழில் அறிமுகமானார். இதையடுத்து, சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் மண்ணிலே ஈரம் உண்டு என்ற பாடலைப் பாடினார்.
இந்த நிலையில், தன் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணம் பற்றிக் கூறியுள்ளதாவது: கணவர் எப்போதும் நெகட்டிவ் பற்றியே பேசுவார். தாளம் கொட்டுவது பிடிக்காது அவருக்கு. என் அம்மாவை விட்டு என்னை பிரிக்க நினைத்தார், அதனால் நான் அவரைவிட்டு பிரின்டஹென் என்று கூறியுள்ளார்.