விருமன் படத்தின் வெற்றி… கார்த்தி & சூர்யாவுக்கு விலையுயர்ந்த பரிசை அளித்த விநியோகஸ்தர்!

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (08:42 IST)
விருமன் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன்  திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12 தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக கலக்கி வருகிறது.

படம் வெளியாகி முதல் வார இறுதியில் மட்டும் வசூல் 30 கோடியை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என தெரிகிறது. கார்த்தி நடித்த படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த படமாக விருமன் அமைந்துள்ளது. இந்த வசூல் சீராக சென்றால் கைதி வசூலை முறியடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் எதிர்பாராத அளவுக்கு பெற்ற வெற்றியை அடுத்து படத்தின் வெற்றி விழாவில் விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேல் படத்தின் கதாநாயகன் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு வைர பிரேஸ்லெட் அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்