சூர்யாவுடன் மீண்டும் மோதும் பார்த்திபன்!

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (09:48 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு சூர்யா நடித்த ’அஞ்சான்’ மற்றும் பார்த்திபன் இயக்கிய ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ ஆகிய திரைப்படங்கள் சுத்ந்திர தின விடுமுறை நாளில் வெளியானது. இந்த படத்தின் ரிலீஸின்போது சூர்யா படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என்னுடைய படத்திற்கு வந்தாலே போதும் என்று என பார்த்திபன் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 
இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் அதே தேதியில் பார்த்திபன் தனது ’ஒத்த செருப்பு 7’ என்ற படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. எனவே ஐந்து வருடங்களுக்குப் பின் மீண்டும் சூர்யா படத்துடன் பார்த்திபன் படம் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
’ஒத்த செருப்பு 7’ திரைப்படத்தின் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்களில் இந்த படத்தின் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
உலகிலேயே முதல் முறையாக ஒரே ஒரு நடிகன் மட்டுமே ஒரு திரைப்படத்தில் நடித்து இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ’ஒத்த செருப்பு  7’ திரைப்படம் தான் என்ற பெருமை இந்த படத்திற்கு உண்டு என்பதும் தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்