‘யானை’ வெற்றியால் இறங்கி வரும் சூர்யா: மீண்டும் உருவாகிறதா ‘அருவா?

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (17:45 IST)
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்றும் இதுவரை வெளியான ஹரி மற்றும் அருண் விஜய் படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக வசூல் செய்யும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறி வருகின்றன
 
இந்த நிலையில் யானை வெற்றியை அடுத்து மீண்டும் அருவா படம் உயிர்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யா மற்றும் ஹரி ஆகியோர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருவா  படம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது யானை வெற்றியால் சூர்யா இறங்கி வந்திருப்பதாகவும் இருவரும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அருவா படத்தை உயிர்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்