இயக்குனருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த பிரபல நடிகர்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (17:29 IST)
நடிகர் சிபிராஜ்  -தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான படம் மாயோன். இப்படத்தை கிஷோர் இயக்கினார்.  டபுள் மீனிங் புரோடெக்சன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்தார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்த்ன் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். அப்போது, இப்படத்தின் இயக்குனனர் கிஷோருக்கு நடிகர் சிபிராஜ் தங்கச் சங்கிலி பரிசளித்தார்.

இந்த நிலையில் இப்படம் வரும் 7 ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாயோன்-2 உருவாகும் எனப் படகுழு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்