வாடகைத்தாய் விவகாரம்: ஆவணங்களை ஒப்படைக்க தயார்- நயன்தாரா, விக்கி தம்பதி

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (20:36 IST)
வாடகைத்தாய் மூலம் இரட்டை  குழந்தைகள்  பிறந்தது தொடர்பாக  அனைத்து ஆவணங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாக நயன்தாரா., விக்னேஷ் சிவன் தம்பதி தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவருக்கும் இவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம்  திருமணம் நடந்தது.

அதன்பின்னர்,  நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இருமுறை தேனிலவுக்காக வெளிநாடு சென்றனர். இவர்கள் திருமணத்தின் போது,  எடுக்கப்பட்ட வீடியோ பல கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

 
தற்போதும் விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் அஜித்62 படத்தை இயக்குவதில் பிஸிஸாக உள்ளார். இந்த நிலையில்  திருமணமாகி 4 மாதங்களில் இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக இருவரும் தெரிவித்தனர்.

இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தையைப்பெற்றெடுக்க அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படு வருகிறது.

இந்த  நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர், இளைஞர் சமூதாயத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதால் இவர்கள் மீது  தம்பதியர் மீது   நடடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில்  வழக்கறிஞர்  ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில்,  இந்த வாடகை தாய் விவகாரத்தில் அதிகாரி தலைமையில் 3  பேர் கொண்ட ஒரு விசாரணைக்குழு அமைகக்ப்பட்டது.

இதுகுறித்த விசாரணை நடந்து வரும் நிலையில் வாடகைத்தாய் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க தயாராக இருப்பதாக  நயன்தார, விக்னேஷ் சிவன் தம்பதி தெரிவித்துள்ளதாக மருத்துவம் மற்றும்  ஊரக நலப்பணிகள் இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணை குறித்த ஆய்வுகள் முடிந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,. மேலும் இருவரும் 2014 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டு தனியர் செயற்கை கரு மையத்தில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்