கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இதையடுத்து அண்டை மாநிலங்களுக்கு சென்று ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார் சூர்யா. அப்படி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “ரெட்ரோ படத்தில் 15 நிமிடங்கள் சிங்கிள் ஷாட்டாக எடுத்துள்ளோம். இந்தக் காட்சியில் பாடல் மற்றும் ஆக்ஷன் எல்லாம் கலந்து வரும். அந்த 15 நிமிடமும் தியேட்டர் மொமண்ட்டாக ரசிகர்களுக்கு இருக்கும்” எனப் பேசியுள்ளார்.