சூர்யா 42 படத்தின் ஷூட்டிங் இந்த நாட்டிலா?... வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (15:41 IST)
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கேஎஸ் ரவிக்குமார் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனேகமாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நாயகியின் தந்தையாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங் தீபாவளி முடிந்து அக்டோபர் 26 ஆம் தேதி முதல் மீண்டும் கோவாவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா 5 கேரக்டர்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் சென்னை மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் இரண்டு கட்டங்களாக ஷூட்டிங் நடந்த நிலையில், அடுத்த கட்ட ஷூட்டிங் இலங்கையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 60 நாட்கள் காட்டுப் பகுதிகளில் ஷூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்