சிவகார்த்தியேன் போல சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார் கவின். லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் ஆகிய படங்களின் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். இதையடுத்து அவர் நடித்த பிளடி பெக்கர் என்ற படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது. தற்போது அவர் நடிப்பில் கிஸ் மற்றும் மாஸ்க் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் கிஸ் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இந்த படம் நீண்ட காலமாக உருவாக்கத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று ரிலீஸானது. இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லை.