தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை பாராட்டிய உச்சநீதிமன்ற நீதிபதி!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:26 IST)
மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ஜோ பேபி இயக்கிய த கிரெட் இந்தியன் கிச்சன் திரைப்படம் Neestream தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் மொழி தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் சீனாவில் நடக்கும் ஷாங்காய் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள உள்ளது. இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த உச்ச நீதிமன்ற நீதி டி ஒய் சந்திர சூட் பாராட்டியுள்ளார். இவர் சபரிமலை வழக்கில் பெண்களும் கோயிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பளித்த நீதிபதிகளுள் ஒருவர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்