தோனியை பெருமைப்படுத்தி வீடியோ வெளியிட்ட இளைஞர்

வியாழன், 15 ஏப்ரல் 2021 (23:32 IST)
முன்னாள்  இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டனும் சென்னை சுப்பர் கிங்ஸ்  அணியின் கேப்டனுமான தோனி மூன்று வகையான தொடர்களும் கோப்பை வென்று சாதித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அவரது தலைமையிலான சென்னை அணி கோப்பை வெல்ல முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.தோனியில் மிகப்பெரிய ரசிகரான கடலூர் மாவட்ட திட்டக்குடி அருகே உள்ள அரங்கூர் கிராமத்தில் வசிப்பவர் கோபி கிருஷ்ணன்.

இவர் வெளிநாட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு தோனி மீது அதிக பாசம். அதனால் தன்  வீட்டை மஞ்சல் வணத்திற்கு மாற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது, கானா ருத்ரா பாடல் வரிகளில் தனது சொந்தப் பணமாக ரூ. 1லட்சத்திற்கு மேல் செலவு செய்து, சமேஷ் சாலமன் இசையில் ஒரு கோபிகிருஷ்ணனே பாடி ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் வரவேற்பை பெரும் என எதிர்பார்த்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்