ஆக.,17ல் சூப்பர் ஸ்டாரின் படப்பிடிப்பு துவக்கம்

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (17:20 IST)
மாலிவுட் என்று அழைக்கப்படும் மலையாள சினிமாவில் குறைந்த பட்ஜெட்வின் நல்ல கதையம்சம் உள்ள சினிமக்கள் வெளிவந்து அவை பல மொழிகளில் ரிமேக் செய்யப்படுகிறது.

இந்நிலையில் மலையாளத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன் மேகன் லால், நடிப்பில் ஜித்து ஜோசப் இயக்கத்தில்  வெளியாகி பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக கடந்த மேமாதம் அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக ஜித்து ஜோசப் மோகன்லாலை வைத்து,  ராம் என்ற படத்தை இயக்கி வந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில்,  த்ரிஷ்யம் படத்தை இப்போது கையில் எடுக்க ஆரம்பித்துள்ளாராம் ஜித்து ஜோசப். பெரும்பாலும் கேரளாவில் நடைபெறுவது போன்ற காட்சிகளை அவர் படமாக்கவுள்ளதாக அவர் கதை எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது
 

வரும் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் த்ரிஷ்யம் 2 வெளியாகவுள்ளதாகவும்,  இன்னும் ஒன்றரை மாதத்தில் இதற்கான படப்பிடிப்புகள் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்