சூப்பர் ஸ்டாருக்கு டாக்டர் பட்டம் : ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (15:50 IST)
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ஷாருக்கான். தனது சொந்த முயற்சியில்  ஹிந்தி சினிமாவில் நுழைந்த அவருக்கு பில்லியன் கணக்கில்  ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் ஒரே நடிகராக இருக்கிறார்.
இத்தனை சிறப்புகள் கொண்ட ஷாருக்கானுக்கு லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் லா என்ற கல்வி நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
 
இதற்கு 53 வயதான சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
 
அதில் 'யுனிவர் சிட்டி லா - க்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் சிறப்பு வாழ்த்துக்களை பட்டம் பெறும்  மாணவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பட்டம் என்னையும் எமது மீரா பவுண்டேசன் டீமையும் உற்சாகமூட்டும் விதத்தில் உள்ளது. ' என்று தெரிவித்துள்ளார்.
இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்