மகேஷ் பாபு தனது ரசிகர்களுக்கு பல உதவிகளை தேடிச்சென்று செய்து வருபவர். புற்று நோயால் பாதித்த சிறுமி ஒருவர் மகேஷ்பாபுவின் தீவிர ரசிகை ஆவார். தான் ஒரு முறையாவது மகேஷ்பாபுவை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இந்த தகவல் மருத்துவமனை மூலம் மகேஷ்பாபுவுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சிறுமியை பார்க்க நேரில் வருவதாக கூறிய மகேஷ் பாபு, அவ்வாறே மருத்துவமனைக்கு வந்து சிறுமியை சந்தித்தார். சிறுமியுடன் சிறிது நேரம் அமர்ந்து பேசிய மகேஷ் பாபு விரைவில் நல்ல உடல் நலத்துடன் திரும்புவாய் என சிறுமிக்கு ஆறுதல் கூறினார். சிறுமிக்கு நல்ல சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்ட அவர் சிறுமியின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார். சிறுமிக்கு உதவியும் செய்துள்ளார்.