கடந்த 1986 ஆம் ஆண்டு சிங்கீதம் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிவராஜ்குமார். இவர் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, தயாரிப்பாளர், நடனக் கலைஞர் பின்னணி பாடகர் எனப் பன்முகக் கலைஞராக உள்ளார்.
சமீபத்தில், நெல்சன் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில், சிவராஜ்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
அதாவது, அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற படத்தை இயக்கிய சுதிப்டோ சென். இவர் அடுத்து இயக்கவுள்ள படம் பாஸ்டர். இப்படத்தில் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.