ரஜினிகாந்த் - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!

சனி, 2 செப்டம்பர் 2023 (15:38 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக அரசியல்வாதிகளை சந்தித்து வரும் நிலையில் இன்று அவரை முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே யோகி ஆதித்ய்நாத் உள்பட ஒரு சில அரசியல் தலைவர்களை ரஜினிகாந்த் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஓ பன்னீர் செல்வம் அவர்களை ரஜினிகாந்த் இருப்பது தமிழக அரசியலில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
ரஜினிகாந்தை ஓபிஎஸ் எதற்காக சந்தித்தார் என்பதை குறித்து இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்