‘சூப்பர் ஸ்டார்’ என்று படத்துக்கு டைட்டில் வைக்கப் போட்டி போடும் இயக்குனர்கள்!

வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:57 IST)
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசூலில் கலக்கி வரும் அவரை இந்த பட்டத்தை சொல்லி ரசிகர்கள் அழைத்து  வருகின்றனர். இந்த டைட்டிலை வைத்து சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சில சர்ச்சைகளும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் என்று தங்கள் படத்துக்கு டைட்டில் வைக்க முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. சிம்பு நடிப்பில் தான் இயக்க உள்ள ஒரு படத்துக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்று டைட்டில் வைக்க உள்ளதாக அவர் பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

அதே போல இயக்குனர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய ஒரு படத்துக்கு சூப்பர் ஸ்டார் என்று தலைப்பு வைக்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இயக்குனரும் இசையமைப்பாளருமான எஸ் எஸ் குமரன் இந்த டைட்டிலை தான் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்