இனி நடிப்புக்கு முழுக்கு… கௌதம் மேனன் எடுத்த அதிரடி முடிவு!

சனி, 18 நவம்பர் 2023 (13:22 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை முடித்தது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பேசியுள்ளார். அதில் “போதிய பணம் இல்லாததால் இந்த படத்தை முடிக்க முடியாத சூழல் நிலவியது. அதனால் அப்போது படங்களில் நடிக்க தொடங்கினேன். அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டுதான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்தேன்.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்திய அவர், இனிமேல் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் இயக்கத்தில் முழுவீச்சாக இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்