எதிர்பார்த்தது போலவே இன்று ரிலீஸாகவில்லை துருவநட்சத்திரம்… இயக்குனர் கௌதம் மேனன் அறிவிப்பு!

வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:22 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து நவம்பர் 24 (இன்று) ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் ரிலீஸூக்கு கடைசி நிமிடம் வரை இந்த படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் படத்தின் மீதும் இயக்குனர் கௌதம் மேனன் மீதும் ஏகப்பட்ட கோடி ரூபாய் கடன் இருந்து, சிக்கலை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் நேற்றிரவு தனது சமூக வலைதளத்தில் துருவ நட்சத்திரம் முன்பதிவு தொடங்குவதாக அறிவித்தது. சில நகரங்களில் முன்பதிவும் தொடங்கி ரசிகர்கள் டிக்கெட்களை புக் செய்தனர். ஆனால் இன்று காலை படம் இன்று ரிலீஸ் ஆகாது என அறிவித்துள்ளார் இயக்குனரும் தயாரிப்பாளருமான கௌதம் மேனன்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ மன்னிக்கவும், இன்று துருவ நட்சத்திரம் படத்தைத் திரைக்கு கொண்டுவர முடியவில்லை. இன்னும் ஒன்றிரண்டு தினங்கள் தேவைப்படும் என தெரிகிறது. இந்த படத்துக்குக் கிடைத்து வரும் ஆதரவு இதயத்தை நெகிழ வைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் நாங்கள் வருவோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்