சன்னி லியோன் பாடலுக்கு எதிர்ப்பு! – பாடல் வரிகள் நீக்கம்?

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (11:06 IST)
இந்தியில் வெளியான சன்னிலியோன் ஆல்பம் பாடலுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதன் பாடல் வரிகளை நீக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தி நடிகை சன்னிலியோன் ஆடிய ஆல்பம் பாடல் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னதாக யூட்யூபில் வெளியானது. ”மதுபான் மெய்ன் ராதிகா” என்ற அந்த பாடல் கிருஷ்ணர் – ராதை இடையேயான காதலை பேசும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பாடல் கிருஷ்ணன் – ராதையை இழிவுபடுத்தும் வகையிலும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் இருப்பதாக கூறி இந்து மத அமைப்புகல் உள்ளிட்ட பலரும் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள அந்த பாடலாசிரியர் ஷெரீப் சர்ச்சைக்குரிய அந்த பாடலின் வரிகளை நீக்குவதாகவும், அதற்கு பதிலாக வேறு வரிகளை சேர்த்து பாடலை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். மூன்று நாட்களில் பாடல் மாற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்