சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் இணைந்த சன்னிலியோன்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:22 IST)
பிரபல காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதையும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தியைப் பார்த்தோம் 

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப் படத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். திகில் மற்றும் காமெடி திரைப்படமான இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடத்தப்பட்ட நிலையில் இந்த படத்தை யுவன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’சிந்தனை செய்’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சதீஷ் சஞ்சனா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் சன்னி லியோன், மொட்ட ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்