இது தொடர்பாக மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும், இந்த விளம்பரத்தில் சன்னி லியோன் செய்யும் ஆபாச செய்கை இந்திய கலாச்சாரத்துக்கு எதிரனது இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய சன்னி லியோன், ‘ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யட்டும் என கூறியுள்ளார்.