ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கும் பிரமாண்ட படத்தில் நாயகியாக ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சங்கமித்ரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த சரித்திரப் படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கின்றனர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பட்ஜெட் 300 கோடிகள் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் டைட்டில் கதாபாத்திரமான சங்கமித்ராவில் நடிக்க தீபிகா படுகோன் மற்றும் சோனாக் சின்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவர்களுக்குப் பதில், ஸ்ருதியை டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.