சூப்பர் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்த யுவன்… சுந்தர் சி படத்தில் பழைய இசைஞானி பாட்டு

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (08:55 IST)
இளையராஜா இசையில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பாடல் ‘ரம் பம் பம் ஆரம்பம்’ பாட்டு.

நடிகர் சுந்தர் சி யின் படங்களுக்கு என்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உண்டு. வழக்கமாக காமடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை உருவாக்கும் சுந்தர் சி, கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களாக எடுத்து ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றமளித்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ள அவர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு, திவ்யதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நிறைவுற்றது. இந்த படத்துக்கு ‘காஃபி வித் காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ளது. வின்னர் படத்துக்கு பின்னர் 19 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா – சுந்தர் சி கூட்டணி இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.  இந்நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பாடலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ‘ரம் பம் பம் ஆரம்பம்’ பாடலை ரீமிக்ஸ் செய்து இந்த பாடலை உருவாக்கியுள்ளார் யுவன். ஏற்கனவே சந்தானம் நடித்த டிக்கிலோனா திரைப்படத்தில் ‘வச்சாலும் பேர் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடலை ரீமிக்ஸ் செய்து வைரல் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்