உருவாகிறதா சன் தொலைக்காட்சியின் மெஹா ஹிட் சீரியலின் இரண்டாம் பாகம்!

செவ்வாய், 2 மார்ச் 2021 (09:00 IST)
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கோலங்கள் சீரியலின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சன் தொலைக்காட்சியில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தேவயானி நடிப்பில் உருவான மெகா தொடர் கோலங்கள். இதை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். சன் தொலைக்காட்சியின் வரலாற்றில் ஆல்டைம் ஹிட்டாக அமைந்த சீரியல் இது. இப்போது கொரோனா காரணமாக புதிய சீரியல்களுக்கு சரியான வரவேற்பு இல்லாத நிலையில் பழைய சீரியல்களையே மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து கோலங்கள் தொடரின் இரண்டாம் பாகத்தை மீண்டும் எடுக்க சன் தொலைக்காட்சி முடிவு செய்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்