சமீபகாலமாக இந்திய சினிமாவில் கன்னட நடிகைகள் கோலோச்சுகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே என நீளும் இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளார் ருக்மிணி வசந்த். கன்னடத்தில் வெளியான சப்த சாகரடாச்சோ எல்லோ படம் மூலமாக கன்னட சினிமா தாண்டியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ருக்மிணி.