திருவிழா ஆரம்பம்; இது அண்ணாத்த திருவிழா! –சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சர்ப்ரைஸ்!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:24 IST)
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக இடையிடையே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டும் வந்தது. இந்நிலையில் ஒருவழியாக படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை 11 மணிக்கும், மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கும் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்த படம் நவம்பர் 11ல் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்