தளபதி விஜய் நாயகியுடன் மோதிய விஜய்சேதுபதி

ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (09:59 IST)
தளபதி விஜய் நடித்து ‘தளபதி 64’ படத்தில் நாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனனுடன் விஜய் சேதுபதி மோதியதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விஜய் நடித்துவரும் ‘தளபதி 64’படத்தின் வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விஜய் மட்டும் விஜய் சேதுபதி மோதும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸில் இருவரும் மோதும் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் விஜய்யிடம் மட்டுமன்றி விஜய் நாயகி மாளவிகா மோகனனுடன் விஜய்சேதுபதி மோதும் ஒரு ஸ்டன்ட் காட்சியும் இந்த படத்தில் இருப்பதாகவும் இந்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் படக்குழுவினரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வரும் ஏப்ரலில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவிருக்கும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்