2006 முதல் 2011வரை திமுக ஆட்சியில் இருந்த போது ஏகப்பட்டப் படங்களை வாங்கி ரிலீஸ் செய்த ‘சன் பிக்சர்ஸ்',2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, அஜித் நடித்த 'மங்காத்தா' படத்தைமட்டுமே வாங்கி வெளியிட்டது.
அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் வருடத்துக்கு ஒரு படத்தைக்கூட வாங்கி, வெளியிடவில்லை. இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மறுபடியும் சன் பிக்சர்ஸ் திரை உலகுக்கு ரீஎன்ட்ரீ ஆகியுள்ளது
விஜய் நடிப்பில் ‘சர்கார்’, ரஜினி நடிப்பில் ‘பேட்ட’, ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘காஞ்சனா 3’ ஆகிய படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.
அடுத்த வருடம் முதல், மாதத்துக்கு ஒரு படத்தை வாங்கி வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் 3 படங்களில், ‘சர்கார்’. வருகிற தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கிறது. ரீஎன்ட்ரி ஆகும் சன் பிக்சர்ஸ்க்கு பழைய அசுர பலத்துடன் களம் இறங்க 'சர்கார்' கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.