பிரபல இயக்குனர் முத்தையா தனது மகன் விஜய் முத்தையா நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் சற்று முன் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு சுள்ளான் சேது என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுள்ளான் என்ற தனுஷ் படமும் சேது என்ற விக்ரம் படமும் இணைந்து உருவாக்கப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மதுரை அருகே நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் இதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.
விஜய் முத்தையா, தர்ஷினி, பிரிகிடா சாகா ஆகியோர் நடித்து வரும் இந்த படத்தில் வில்லனாக பரத் நடித்து வருவதாக கூறப்படுகிறது. கேகேஆர் சினிமா சார்பில் ரமேஷ் பாண்டியன் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.