ஆர் ஆர் ஆர் ரிலிஸூக்கு உதவிய கங்குபாய் படக்குழு!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:05 IST)
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் ஜனவரி 7 ஆம் தேதி ரிலீஸாகிறது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்த படத்தை இந்த ஆண்டு ஜனவரி மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அக்டோபர் மாதம் ரிலிஸ் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் பட ரிலீஸ் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி படத்தின் ரிலீஸை உறுதி செய்துள்ளனர். இந்தியா முழுவதும் மிக அதிகளவில் திரைகளில் இந்த படம் ரிலீஸாகிறது.

இந்நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி ஆலியா பட் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குபாய் காட்யவாடி எனும் படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால் இரண்டு படங்களும் ஒன்றாக ரிலிஸ் ஆனால் போதுமான திரைகள் கிடைக்காது என்பதால் இப்போது கங்குபாய் படத்தின் ரிலீஸை பிப்ரவரி 18 ஆம் தேதி தள்ளிவைத்துள்ளனர். இதற்கு படத்தின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்