டிக்கெட் விலை குறைப்பு… ஆந்திர அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறதா ஆர் ஆர் ஆர் படக்குழு!

திங்கள், 15 நவம்பர் 2021 (11:38 IST)
சமீபத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ஆந்திராவில் திரையரங்க டிக்கெட் விலைகளை மறு நிர்ணயம் செய்தார்.

சமீப காலமாக திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது என்பது அதிக செலவு வைக்கும் ஒரு விஷயமாக உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் டிக்கெட் விலைகளை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறைத்து அதைக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் படி டிக்கெட் விலை 10 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை மட்டுமே இருக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்  மூலம் சினிமா நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படும் எனசொல்லப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகும் ஆர் ஆர் ஆர் படத்துக்கு இதனால் பெரிய அளவில் வசூல் பாதிப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. மேலும் படக்குழுவினர் ஆந்திர அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதை படக்குழுவினர் மறுத்துள்ளனர். ஆனால் அதற்குப் பதிலாக இது எப்படி தங்கள் படத்தை பாதிக்கும் என்பதை முதல்வரை அணுகி முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்