'கோப்ரா’ நாயகியை கேக் வெட்டி வழியனுப்பி வைத்த படக்குழுவினர்!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (12:58 IST)
கோப்ரா’ நாயகியை கேக் வெட்டி வழியனுப்பி வைத்த படக்குழுவினர்!
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வந்த கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிதி ஷெட்டி பகுதியின் படப்பிடிப்பு முடிந்ததால் அவரை படக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர்
 
'கோப்ரா’ படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி கடந்த சில மாதங்களாக நடித்து வந்தார். விக்ரமுடன் இணைந்து நடித்த இவர் காட்சிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் 'கோப்ரா’ படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி தனது பகுதியின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்து கொண்டார். இதனை அடுத்து அவருக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழியனுப்பு விழாவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்