ஸ்ரீதேவியை விட குறைவான சம்பளம் வாங்கிய ரஜினி!

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (19:22 IST)
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அவரை பற்றிய பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
 
அந்த வகையில் ஸ்ரீதேவி தமிழில் அறிமுகமான படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். 
 
இந்த படத்தில் ரஜினி, கமல் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஸ்ரீதேவிக்கு 9,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாம். அதோடு கமல் மற்றும் ரஜினியின் சம்பள விவரங்களும் வெளியாகியுள்ளது. கமலுக்கு 27,000 ரூபாயும் ரஜினிக்கு 3000 ரூபாயும் சமபளம்  வழங்கப்பட்டதாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்