ஸ்ரீதேவியின் மாம் பட மூன்றாம் நாள் வசூல் நிலவரம்!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (16:58 IST)
ஸ்ரீதேவி தனது கணவரான போனி கபூரின் தயாரிப்பில் ‘மாம்’என்ற இந்தி திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். ரவி உத்யவார் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளியன்று படம் ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 
80களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர். இவர் பாலிவுட் திரையுலகம் சென்று அங்கும் வெற்றி கொடி நாட்டினார்.  ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மாம் முதல் நாள் இப்படம் இந்தியா முழுவதுமே வெறும் ரூ. 3 கோடி தான் வசூல் செய்தது. ஆனால், இரண்டாவது நாள் ரூ. 5 கோடி, மூன்றாவது நாள் ரூ. 7 கோடி வரை வசூல் செய்துள்ளது.
 
இதன் மூலம் 3 நாள் முடிவில் இப்படம் ரூ. 15 கோடி வரை வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 20 கோடி வசூல் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஸ்ரீதேவி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்