ஜெயலலிதா போல் திருமணம் செய்யாமல் வாழ்வேன் - ஸ்ரீரெட்டி பேட்டி

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (11:25 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே தனக்கு உந்து சக்தி என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். 
 
அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் கொடுக்கும் பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.  
 
இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில் “மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு உந்து சக்தி. அவர் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்து பெரிய இடத்திற்கு உயர்ந்தார். அவரைப் போலவே நானும் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை. என் வாழ்க்கையை பெண்களின் முன்னேற்றத்திற்காக தியாகம் செய்வேன். சமூக சேவைகளில் ஈடுபட்டு மக்களுக்காக பாடுபடுவேன்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்