கைதி 2 ஆரம்பிக்கலாமா?.... லோகேஷ் டிவீட்டைப் பகிர்ந்த கைதி தயாரிப்பாளர்

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (16:59 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இன்று காலை இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது நீண்ட நாட்கள் கனவு நிறைவேற உள்ளதாக தெரிவித்துள்ளதுடன், விக்ரம் பார்க்கும் முன்னர் கைதியை மீண்டும் ஒருமுறை பார்த்து விடுமாறு கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக லோகேஷ் பகிர்ந்திருந்த டிவீட்டைப் பகிர்ந்துள்ள கைதி தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு “கைதி 2 ஆரம்பிக்கிலாங்களா” என டிவீட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்