இரண்டு படங்களில் கிடைக்காதது ; ரஜினிக்கு இப்போ கிடைக்கப் போகுது

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (13:09 IST)
கடந்த இரண்டு படங்களில் ரஜினிக்கு கிடைக்காத ஒரு விஷயம், இப்போது கிடைக்க இருக்கிறது.

 
ரஜினி படம் என்றாலே, ஓப்பனிங் பாடலை எப்போதும் எஸ்.பி.பி. தான் பாடுவார். இது இப்போது தொடங்கிய விஷயம் அல்ல. பல வருடங்களாகவே இப்படித்தான் இருக்கிறது. இந்த இசையமைப்பாளர், அந்த இசையமைப்பாளர் என்றெல்லாம் கிடையாது. யாராக இருந்தாலும் ரஜினி போடும் முதல் கண்டிஷன், ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பி. பாட வேண்டும் என்பதுதான்.
 
ஆனால், ‘கபாலி’ மற்றும் ‘காலா’ என கடந்த இரண்டு படங்களில் இந்த விஷயம் மிஸ்ஸிங். இதுமட்டுமல்ல, ரஜினியின் ஐகானாக இருந்த பல விஷயங்கள் இந்தப் படங்களில் மிஸ்ஸிங். இந்த இரண்டு படங்களிலும் எஸ்.பி.பி.யின் இடத்தை அருண்ராஜா காமராஜ் கைப்பற்றினார். இரண்டு படங்களிலும் ஓப்பனிங் பாடல்களை எழுதி, அவரே பாடினார்.
 
இந்நிலையில், கடந்த இரண்டு படங்களில் மிஸ்ஸான இந்த விஷயம், தற்போது கிடைக்கப் போகிறது. ஆம், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில், ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பி.யை பாடவைக்கப் போகிறார் அனிருத்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்