ரஜினி-தனுஷ்: யாரை இயக்குவது எளிதாக இருந்தது? செளந்தர்யா

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (23:15 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த், ரஜினி நடித்த 'கோச்சடையான்' என்ற அனிமேஷன் படத்தையும், தனுஷ் நடித்த 'விஐபி 2' படத்தையும் இயக்கியுள்ளார்.



 
 
இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த செளந்தர்யாவிடம் ரஜினி, தனுஷ் யாரை இயக்குவது எளிதாக இருந்தது என்ற கேள்வி கேட்கப்பட்டது
 
இதற்கு பதிலளித்த செளந்தர்யா, 'ரஜினி, தனுஷ் இருவருமே தொழில் மீது பக்தி கொண்டவர்கள். எனவே இருவர் படங்களையும் இயக்குவதில் எனக்கு எந்த சிரமும் இல்லை. இருவருமே கேமிரா முன் நின்றுவிட்டால் சீரியஸ் ஆகிவிடுவார்கள். என்னை அவர்கள் மகள் என்றோ, மைத்துனி என்றோ பார்த்ததில்லை' என்று செளந்தர்யா பதிலளித்தார்
அடுத்த கட்டுரையில்