சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே தற்போது அரசியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இருவரும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ கட்சி ஆரம்பிப்பது உறுதி என்பதே இப்போதைய கோலிவுட்டின் ஹாட் டாக்
இந்த நிலையில் ரஜினி, கமல் இருவரும் அரசியல் கட்சி ஆரம்பித்தால் இருவரில் யாருக்கு நடிகர் சங்கம் ஆதரவு கொடுக்கும் என்று இன்று விஷாலிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் கூற சற்று தயங்கிய விஷால் பின்னர் இருவரும் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவித்த பின்னரே இதுகுறித்து முடிவு எடுக்க முடியும் என்றும், அதற்கு முன்னர் இதுகுறித்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் கூறி விஷால் ஒருவழியாக சமாளித்தார்