ரஜினியின் இளையமகளின் கைக்கு மாறிய பொன்னியின் செல்வன்!!

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (19:15 IST)
எழுத்தாளர் கல்கியின் காவியல் பொன்னியின் செல்வன். இந்த காவியம் சோழ பேரரசரான அருள்மொழிவர்மனின் வாழ்க்கை வரலாறாகும். 
 
இந்த காவியத்தை திரைப்படமாக எடுக்க திட்டமிட்ட போது, இந்த மாபெரும் காவியத்தை சுருக்கு 3 மணி நேரத்திற்குள் சொல்ல முடியது என கைவிடப்பட்டது. 
 
குறிப்பாக இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படம் பொன்னியின் செல்வன். அவரது இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படம் பொன்னியின் செல்வன் காவியத்தின் தாக்கத்தை பெற்றிருந்தது என பலர் தெரிவித்தனர். 
 
இந்நிலையில், இக்காவியம் வெப்சீரிஸாக எடுக்கப்படவுள்ளது. இதற்காக ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் எம்.எக்ஸ்.பிளேயர் நிறுவனமும் இணைந்துள்ளது. 
 
இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பை செளந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்