7 முறை நிர்வாணமான நடித்தேன்... அழுதேன்; இளம்நடிகை துணிச்சல் பதில்

புதன், 11 ஜூலை 2018 (18:35 IST)
செக்ரெட் கேம்ஸ் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ள இளம்நடிகை குப்ரா செட் நிர்வாணமாக நடித்தது குறித்து கேட்ட கேள்விக்கு துணிச்சலான பதிலை கொடுத்துள்ளார்.

 
இயக்குநர் அனுராக் காஷ்யப், விக்ரமாதித்தியா மேத்வானி இணைந்து இயக்கியுள்ள செக்ரட் கேம்ஸ் என்ற வெப்சீரிஸ் முதல் எபிஸோடே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சைப் அலிகான், ராதிகா ஆப்தே, நசாசுதீன் சித்திக் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 
 
இருந்தாலும் திருநங்கையாக நடித்துள்ள இளம்நடிகை குப்ரா செட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதில் அவர் ஒரு நிர்வாண காட்சியில் நடித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் துணிச்சலான பதிலை கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
நடிகர்கள் தேர்வுக்கு சென்றபோது நிர்வாண காட்சிகள் நிறைய இருக்கிறது என்று இயக்குநர்கள் கூறினார்கள், அப்போது நிர்வாண காட்சிகளில் நடிப்பது ஒன்றும் பெரிதல்ல் என்றேன். ஆனால் படப்பிடிப்பின் போது நான் அழுதுவிட்டேன்.
 
நிர்வாண காட்சிகள் 7 முறை படமாக்கப்பட்டது. ஒவ்வொரு முறையில் நடித்த பின் சரியாக வரவில்லை திரும்பவும் காட்சிப்படுத்த வேண்டு என்றனர். அப்போது எனக்கு அழுகை வந்தது. அந்த காட்சியில் நடித்து முடித்த பின் அனைவரும் கைத்தட்டி பாராட்டினார்கள். படத்தின் காட்சிகளுக்கு தேவையென்றால் இப்படிப்பட்ட நிர்வாணக் காட்சிகளில் நடிப்பது தப்பில்லையே என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்