விடுதலை, கருடன், கொட்டுக்காளி மற்றும் விடுதலை 2 என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் சூரி. அவர் நடித்துள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி ரிலீஸாகி இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.
இதையடுத்து சூரி விடுதலை 1 & 2 படங்களின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் அடுத்து மண்டாடி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் இணை இயக்குனரும், செல்ஃபி படத்தின் இயக்குனருமான மதிமாறன் இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். கடலை சுற்றியக் கதைக்களமாக படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இந்த படத்துக்காக ராமேஸ்வரம் அருகே கடல்பகுதியில் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்படி சனிக்கிழமை படப்பிடிப்பின் போது காற்றால் படகுக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பினலானா கேமரா மற்றும் உபகரணங்கள் நீரில் மூழ்கி பயன்படுத்தப் படாத முடியாத சூழலுக்கு உள்ளாகியுள்ளன. ஆனால் இந்த விபத்தில் படக்குழுவினர் யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் தப்பியுள்ளனர்.