நான் யாரையும் கண்டுபிடித்து வாழ்க்கைக் கொடுத்ததாக எல்லாம் சொல்ல மாட்டேன் – சிவகார்த்திகேயன் ஆதங்கம்!

vinoth
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (14:37 IST)
‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனான சூரி அதன் பின்னர் நடித்த ‘கருடன்’ திரைப்படம் கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது. அதையடுத்து இப்போது ’கொட்டுக்காளி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட கொட்டுக்காளி  பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து இன்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் “உங்களுக்கு அடையாளம் கொடுதததே நான்தான், உங்களைத் தேடிக் கண்டுபிடித்ததே நான்தான் என்றெல்லாம் யாரிடமும் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் ‘என்னிடம் நான் தான் உனக்கு வாழ்க்கைக் கொடுத்தது என்று சொல்லியே பழக்கப்படுத்தி விட்டனர்’. அந்த மாதிரி ஆள் நான் இல்லை” எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்