நான் கோயில்களுக்கு எதிரானவன் அல்ல: சர்ச்சைக்க்கு விளக்கமளித்த சூரி

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (19:14 IST)
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூரி பேசிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அதற்கு சூரி தற்போது விளக்கம் அளித்துள்ளார் 
 
விருமன் திரைப்பட விழாவில் சூரி பேசும்போது அன்ன சத்திரங்கள் கட்டுவதைவிட ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது தான் முக்கியம் என்றும் அதை சிறப்பாக சூர்யா செய்து வருகிறார் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இதற்கு திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர் என்றும் குறிப்பாக இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூரி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
நான் கோயில்களுக்கு எதிரானவன் அல்ல, சாமி கும்பிடுறவன். அன்னை மீனாட்சியின் தீவிர பக்தன். நான் படிக்காதவன். படிப்பு முக்கியத்துவம் குறித்து பேசினேன்.அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நடிகர்ன் சூரி 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்