உங்க அப்பனுக்கும் பேப்பே… சூதுகவ்வும் 2 டீசர் எப்படி இருக்கு?

vinoth
சனி, 23 மார்ச் 2024 (07:11 IST)
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூதுகவ்வும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் வெளியான முழுநீள ப்ளாக் காமெடி என்ற பெருமையை சூதுகவ்வும் பெற்றது. அதற்கு முன்னர் வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் ஆரண்ய காண்டம் (சில காட்சிகள்) ஆகியவை வெற்றிப் படமாக அமையவில்லை.

இந்நிலையில் இப்போது 10 வருடங்கள் கழித்து சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் சி வி குமார். எஸ் ஜெ அர்ஜுன் இயக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கருணாகாரன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. முதல் பாகத்தைப் போலவே வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், பில்லா ஜெகன் ஆகியோர் இந்த டீசரில் தொடர்வதால் முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் தொடர்பிருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்